நூல்கள்›அகநானூறு›பாடல் 1886

பாடல் 1886

கயமனார்

'முலை முகம்செய்தன; முள் எயிறு இலங்கின;

தலை முடிசான்ற; தண் தழை உடையை;

அலமரல் ஆயமொடு யாங்கணும் படாஅல்;

மூப்புடை முது பதி தாக்குஅணங்கு உடைய;

காப்பும் பூண்டிசின்; கடையும் போகலை; . . . .

பேதை அல்லை மேதைஅம் குறுமகள்!

பெதும்பைப் பருவத்து ஒதுங்கினை, புறத்து' என,

ஒண் சுடர் நல் இல் அருங் கடி நீவி,

தன் சிதைவு அறிதல் அஞ்சி இன் சிலை

ஏறுடை இனத்த, நாறு உயிர் நவ்வி! . . . .

வலை காண் பிணையின் போகி, ஈங்கு ஓர்

தொலைவு இல் வெள் வேல் விடலையொடு, என் மகள்

இச் சுரம் படர்தந்தோளே. ஆயிடை,

அத்தக் கள்வர் ஆ தொழு அறுத்தென,

பிற்படு பூசலின் வழிவழி ஓடி . . . .

மெய்த் தலைப்படுதல்செல்லேன்; இத் தலை,

நின்னொடு வினவல் கேளாய்! பொன்னொடு

புலிப் பல் கோத்த புலம்பு மணித் தாலி,

ஒலிக் குழைச் செயலை உடை மாண் அல்குல்,

ஆய் சுளைப் பலவின் மேய் கலை உதிர்த்த . . . .

துய்த் தலை வெண் காழ் பெறூஉம்

கல் கெழு சிறுகுடிக் கானவன் மகளே.

களிற்றியானை நிரை

← பாடல் 1885பாடல் 1887 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்