நூல்கள்›அகநானூறு›பாடல் 1882

பாடல் 1882

எயினந்தை மகனார் இளங்கீரனார்

இருங் கழி முதலை மேஎந்தோல் அன்ன

கருங் கால் ஓமைக் காண்பு இன் பெருஞ் சினைக்

கடியுடை நனந்தலை, ஈன்று இளைப்பட்ட,

கொடு வாய்ப் பேடைக்கு அல்குஇரை தரீஇய,

மான்று வேட்டு எழுந்த செஞ் செவி எருவை . . . .

வான் தோய் சிமைய விறல் வரைக் கவாஅன்,

துளங்கு நடை மரையா வலம் படத் தொலைச்சி,

ஒண் செங் குருதி உவற்றி உண்டு அருந்துபு,

புலவுப் புலி துறந்த கலவுக் கழி கடு முடை,

கொள்ளை மாந்தரின் ஆனாது கவரும் . . . .

புல் இலை மராஅத்த அகன் சேண் அத்தம்,

கலம் தரல் உள்ளமொடு கழியக் காட்டி,

பின் நின்று துரக்கும் நெஞ்சம்! நின் வாய்

வாய்போல் பொய்ம்மொழி எவ்வம் என் களைமா

கவிர் இதழ் அன்ன காண்பு இன் செவ் வாய் . . . .

அம் தீம் கிளவி, ஆய் இழை, மடந்தை

கொடுங் குழைக்கு அமர்த்த நோக்கம்

நெடுஞ் சேண் ஆர் இடை விலங்கும் ஞான்றே?

களிற்றியானை நிரை

← பாடல் 1881பாடல் 1883 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்