நூல்கள்›அகநானூறு›பாடல் 1881

பாடல் 1881

கபிலர்

கோழிலை வாழைக் கோள் முதிர் பெருங் குலை

ஊழுறு தீம் கனி, உண்ணுநர்த் தடுத்த

சாரற் பலவின் சுளையொடு, ஊழ் படு

பாறை நெடுஞ் சுனை, விளைந்த தேறல்

அறியாது உண்ட கடுவன் அயலது . . . .

கறி வளர் சாந்தம் ஏறல்செல்லாது,

நறு வீ அடுக்கத்து மகிழ்ந்து கண்படுக்கும்

குறியா இன்பம், எளிதின், நின் மலைப்

பல் வேறு விலங்கும், எய்தும் நாட!

குறித்த இன்பம் நினக்கு எவன் அரிய? . . . .

வெறுத்த ஏஎர், வேய் புரை பணைத் தோள்,

நிறுப்ப நில்லா நெஞ்சமொடு நின்மாட்டு,

இவளும், இனையள்ஆயின், தந்தை

அருங் கடிக் காவலர் சோர் பதன் ஒற்றி,

கங்குல் வருதலும் உரியை; பைம் புதல் . . . .

வேங்கையும் ஒள் இணர் விரிந்தன;

நெடு வெண் திங்களும் ஊர்கொண்டன்றே.

களிற்றியானை நிரை

← பாடல் 1880பாடல் 1882 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்