நூல்கள்›அகநானூறு›பாடல் 1880

பாடல் 1880

மாமூலனார்

'வண்டு படத் ததைந்த கண்ணி, ஒண் கழல்,

உருவக் குதிரை மழவர் ஓட்டிய

முருகன் நற் போர் நெடு வேள் ஆவி,

அறுகோட்டு யானைப் பொதினி ஆங்கண்,

சிறு காரோடன் பயினொடு சேர்த்திய . . . .

கல் போல் பிரியலம்' என்ற சொல்தாம்

மறந்தனர் கொல்லோ தோழி! சிறந்த

வேய் மருள் பணைத் தோள் நெகிழ, சேய் நாட்டுப்

பொலங்கல வெறுக்கை தருமார் நிலம் பக,

அழல் போல் வெங்கதிர் பைது அறத் தெறுதலின், . . . .

நிழல் தேய்ந்து உலறிய மரத்த; அறை காய்பு,

அறுநீர்ப் பைஞ் சுனை ஆம் அறப் புலர்தலின்,

உகு நெல் பொரியும் வெம்மைய; யாவரும்

வழங்குநர் இன்மையின், வௌவுநர் மடிய,

சுரம் புல்லென்ற ஆற்ற; அலங்கு சினை . . . .

நார் இல் முருங்கை நவிரல் வான் பூச்

சூரல்அம் கடு வளி எடுப்ப, ஆருற்று,

உடை திரைப் பிதிர்வின் பொங்கி, முன்

கடல் போல் தோன்றல காடு இறந்தோரே?

களிற்றியானை நிரை

← பாடல் 1879பாடல் 1881 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்