நூல்கள்›கலித்தொகை›பாடல் 1877

பாடல் 1877

தொல் இயல் ஞாலத்துத் தொழில் ஆற்றி, ஞாயிறு,

வல்லவன் கூறிய வினை தலை வைத்தான்போல்,

கல் அடைபு, கதிர் ஊன்றி, கண் பயம் கெடப் பெயர;

அல்லது கெடுப்பவன் அருள் கொண்ட முகம் போல,

மல்லல் நீர்த் திரை ஊர்பு, மால் இருள் மதி சீப்ப; . . . .

இல்லவர் ஒழுக்கம் போல், இருங் கழி மலர் கூம்ப;

செல்லும் என் உயிர்ப் புறத்து இறுத்தந்த மருள் மாலை!

மாலை நீ,

இன்புற்றார்க்கு இறைச்சியாய் இயைவதோ செய்தாய்மன்;

அன்புற்றார் அழ, நீத்த அல்லலுள், கலங்கிய . . . .

துன்புற்றார்த் துயர் செய்தல் தக்கதோ, நினக்கு?

மாலை நீ,

கலந்தவர் காமத்தைக் கனற்றலோ செய்தாய்மன்;

நலம் கொண்டு நல்காதார் நனி நீத்த புலம்பின்கண்

அலந்தவர்க்கு அணங்கு ஆதல் தக்கதோ, நினக்கு? . . . .

மாலை நீ,

எம் கேள்வற் தருதலும் தருகல்லாய்; துணை அல்லை;

பிரிந்தவர்க்கு நோய் ஆகி, புணர்ந்தவர்க்குப் புணை ஆகி,

திருந்தாத செயின் அல்லால் இல்லையோ, நினக்கு?

என ஆங்கு . . . .

ஆய் இழை மடவரல் அவலம் அகல,

பாய் இருட் பரப்பினைப் பகல் களைந்தது போல,

போய் அவர் மண் வௌவி வந்தனர்

சேய் உறை காதலர் செய் வினை முடித்தே.

நெய்தற் கலி

← பாடல் 1876பாடல் 1878 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்