நூல்கள்›கலித்தொகை›பாடல் 1878

பாடல் 1878

நிரை திமில் களிறாக, திரை ஒலி பறையாக,

கரை சேர் புள்ளினத்து அம் சிறை படையாக,

அரைசு கால் கிளர்ந்தன்ன உரவு நீர்ச் சேர்ப்ப! கேள்:

கற்பித்தான் நெஞ்சு அழுங்கப் பகர்ந்து உண்ணான், விச்சைக்கண்

தப்பித்தான் பொருளேபோல், தமியவே தேயுமால், . . . .

ஒற்கத்துள் உதவியார்க்கு உதவாதான்; மற்று அவன்

எச்சத்துள் ஆயினும், அஃது எறியாது விடாதே காண்;

கேளிர்கள் நெஞ்சு அழுங்கக் கெழுவுற்ற செல்வங்கள்

தாள் இலான் குடியே போல், தமியவே தேயுமால்,

சூள் வாய்த்த மனத்தவன் வினை பொய்ப்பின்; மற்று அவன் . . . .

வாள் வாய் நன்று ஆயினும், அஃது எறியாது விடாதே காண்;

ஆங்கு

அனைத்து, இனி பெரும! அதன் நிலை; நினைத்துக் காண்:

சினைஇய வேந்தன் எயிற்புறத்து இறுத்த

வினை வரு பருவரல் போல, . . . .

துனை வரு நெஞ்சமொடு வருந்தினள் பெரிதே.

நெய்தற் கலி

← பாடல் 1877பாடல் 1879 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்