நூல்கள்›கலித்தொகை›பாடல் 1875

பாடல் 1875

உரை செல உயர்ந்து ஓங்கி, சேர்ந்தாரை ஒரு நிலையே

வரை நில்லா விழுமம் உறீஇ, நடுக்கு உரைத்து, தெறல் மாலை

அரைசினும் அன்பு இன்றாம், காமம்; புரை தீர,

அன்ன மென் சேக்கையுள் ஆராது, அளித்தவன்

துன்னி அகல, துறந்த அணியளாய், . . . .

நாணும் நிறையும் உணர்கல்லாள், தோள் ஞெகிழ்பு,

பேர் அமர் உண்கண் நிறை மல்க, அந் நீர் தன்,

கூர் எயிறு ஆடி, குவிமுலைமேல் வார்தர,

தேர் வழி நின்று தெருமரும்; ஆயிழை

கூறுப கேளாமோ, சென்று; . . . .

'எல்லிழாய்! எற்றி வரைந்தானை, நாணும் மறந்தாள்' என்று,

உற்றனிர் போல, வினவுதிர்! மற்று இது

கேட்டீமின், எல்லீரும் வந்து;

வறம் தெற மாற்றிய வானமும் போலும்;

நிறைந்து என்னை மாய்ப்பது ஓர் வெள்ளமும் போலும் . . . .

சிறந்தவன் தூ அற நீப்ப, பிறங்கி வந்து,

என்மேல் நிலைஇய நோய்;

'நக்கு நலனும் இழந்தாள், இவள்' என்னும்

தக்கவிர் போலும்! இழந்திலேன்மன்னோ

மிக்க என் நாணும், நலனும், என் உள்ளமும், . . . .

அக் கால் அவனுழை ஆங்கே ஒழிந்தன!

உக் காண் இஃதோ உடம்பு உயிர்க்கு ஊற்றாக,

செக்கர் அம் புள்ளித் திகிரி அலவனொடு, யான்

நக்கது, பல் மாண் நினைந்து

கரை காணா நோயுள் அழுந்தாதவனைப் . . . .

புரை தவக் கூறி, கொடுமை நுவல்வீர்!

வரைபவன் என்னின் அகலான் அவனை,

திரை தரும் முந்நீர் வளாஅகம் எல்லாம்,

நிரை கதிர் ஞாயிற்றை, நாடு என்றேன்; யானும்

உரை கேட்புழி எல்லாம் செல்வேன்; புரை தீர்ந்தான் . . . .

யாண்டு ஒளிப்பான்கொல்லோ மற்று;

மருள் கூர் பிணை போல் மயங்க, வெந் நோய் செய்யும்

மாலையும் வந்து, மயங்கி, எரி நுதி

யாமம் தலை வந்தன்றுஆயின், அதற்கு என் நோய்

பாடுவேன், பல்லாருள் சென்று; . . . .

யான் உற்ற எவ்வம் உரைப்பின், பலர்த் துயிற்றும்

யாமம்! நீ துஞ்சலைமன்;

எதிர்கொள்ளும் ஞாலம், துயில் ஆராது ஆங்கண்

முதிர்பு என்மேல் முற்றிய வெந் நோய் உரைப்பின்,

கதிர்கண் மழுங்கி, மதியும் அதிர்வது போல் . . . .

ஓடிச் சுழல்வதுமன்;

பேர் ஊர் மறுகில் பெருந் துயிற் சான்றீரே!

நீரைச் செறுத்து, நிறைவுற ஓம்புமின்

கார் தலைக்கொண்டு பொழியினும், தீர்வது

போலாது, என் மெய்க் கனலும் நோய்; . . . .

இருப்பினும் நெஞ்சம் கனலும்; செலினே,

வருத்துறும் யாக்கை; வருந்துதல் ஆற்றேன்;

அருப்பம் உடைத்து, என்னுள் எவ்வம் பொருத்தி,

பொறி செய் புனை பாவை போல, வறிது உயங்கிச்

செல்வேன், விழுமம் உழந்து; . . . .

என ஆங்குப் பாட, அருள் உற்று;

வறம் கூர் வானத்து வள் உறைக்கு அலமரும்

புள்ளிற்கு அது பொழிந்தாஅங்கு, மற்றுத் தன்

நல் எழில் மார்பன் முயங்கலின்,

அல்லல் தீர்ந்தன்று, ஆயிழை பண்பே. . . . .

நெய்தற் கலி

← பாடல் 1874பாடல் 1876 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்