நூல்கள்›கலித்தொகை›பாடல் 1873

பாடல் 1873

நன்னுதாஅல்! காண்டை: நினையா, நெடிது உயிரா,

என் உற்றாள்கொல்லோ? இஃது ஒத்தி பல் மாண்

நகுதரும் தன் நாணுக் கைவிட்டு, இகுதரும்

கண்ணீர் துடையா, கவிழ்ந்து, நிலன் நோக்கி,

அன்ன இடும்பை பல செய்து, தன்னை . . . .

வினவுவார்க்கு ஏதில சொல்லி, கனவுபோல்

தெருளும் மருளும் மயங்கி வருபவள்

கூறுப கேளாமோ, சென்று;

'எல்லா! நீ என் அணங்கு உற்றனை? யார் நின் இது செய்தார்?

நின் உற்ற அல்லல் உரை' என, என்னை . . . .

வினவுவீர்! தெற்றெனக் கேண்மின்: ஒருவன்,

'குரற்கூந்தால்! என் உற்ற எவ்வம் நினக்கு யான்

உரைப்பனைத் தங்கிற்று, என் இன் உயிர்' என்று,

மருவு ஊட்டி, மாறியதற்கொண்டு, எனக்கு

மருவு உழிப் பட்டது, என் நெஞ்சு; . . . .

எங்கும் தெரிந்து, அது கொள்வேன், அவன் உள்வழி

பொங்கு இரு முந்நீர் அகம் எல்லாம் நோக்கினை

திங்களுள் தோன்றி இருந்த குறு முயால்!

எம் கேள் இதன் அகத்து உள்வழிக் காட்டீமோ?

காட்டீயாய்ஆயின், கத நாய் கொளுவுவேன்; . . . .

வேட்டுவர் உள்வழிச் செப்புவேன்; ஆட்டி

மதியொடு பாம்பு மடுப்பேன் மதி திரிந்த

என் அல்லல் தீராய்எனின்;

என்று, ஆங்கே, உள் நின்ற எவ்வம் உரைப்ப, மதியொடு

வெண் மழை ஓடிப் புகுதி; சிறிது என்னைக் . . . .

கண்ணோடினாய் போறி, நீ;

நீடு இலைத் தாழைத் துவர் மணற் கானலுள்

ஓடுவேன்; ஓடி ஒளிப்பேன்; பொழில்தொறும்

நாடுவேன்; கள்வன் கரந்திருக்கற்பாலன்கொல்?

ஆய் பூ அடும்பின் அலர்கொண்டு, உதுக் காண், எம் . . . .

கோதை புனைந்த வழி;

உதுக் காண், சாஅய் மலர் காட்டி, சால்பிலான், யாம் ஆடும்

பாவை கொண்டு ஓடியுழி;

உதுக் காண் தொய்யில் பொறித்த வழி

உதுக் காண் 'தையால்! தேறு' எனத் தேற்றி, அறனில்லான் . . . .

பைய முயங்கியுழி;

அளிய என் உள்ளத்து, உயவுத் தேர் ஊர்ந்து,

விளியா நோய் செய்து, இறந்த அன்பிலவனைத்

தெளிய விசும்பினும் ஞாலத்தகத்தும்

வளியே! எதிர்போம் பல கதிர் ஞாயிற்று . . . .

ஒளி உள்வழி எல்லாம் சென்று; முனிபு எம்மை

உண்மை நலன் உண்டு ஒளித்தானைக் காட்டீமோ;

காட்டாயேல், மண்ணகம் எல்லாம் ஒருங்கு சுடுவேன், என்

கண்ணீர் அழலால் தெளித்து;

பேணான் துறந்தானை நாடும் இடம் விடாயாயின் . . . .

பிறங்கு இரு முந்நீர்! வெறு மணலாகப்

புறங்காலின் போக இறைப்பேன்; முயலின்,

அறம் புணையாகலும் உண்டு;

துறந்தானை நாடித் தருகிற்பாய்ஆயின், நினக்கு ஒன்று

பாடுவேன், என் நோய் உரைத்து; . . . .

புல்லிய கேளிர் புணரும் பொழுது உணரேன்

எல்லி ஆக, 'எல்லை' என்று, ஆங்கே, பகல் முனிவன்;

எல்லிய காலை இரா, முனிவன்; யான் உற்ற

அல்லல் களைவார் இலேன்;

ஓஒ! கடலே! தெற்றெனக் கண்ணுள்ளே தோன்ற இமை எடுத்து, . . . .

'பற்றுவேன்' என்று, யான் விழிக்குங்கால், மற்றும் என்

நெஞ்சத்துள் ஓடி ஒளித்து, ஆங்கே, துஞ்சா நோய்

செய்யும், அறனில்லவன்;

ஓஒ! கடலே! ஊர் தலைக்கொண்டு கனலும் கடுந் தீயுள்

நீர் பெய்தக்காலே சினம் தணியும்; மற்று இஃதோ . . . .

ஈரம் இல் கேள்வன் உறீஇய காமத் தீ

நீருள் புகினும், சுடும்

ஓஒ! கடலே! 'எற்றமிலாட்டி என் ஏமுற்றாள்?' என்று, இந் நோய்

உற்று அறியாதாரோ நகுக! நயந்தாங்கே

இற்றா அறியின், முயங்கலேன், மற்று என்னை . . . .

அற்றத்து இட்டு ஆற்று அறுத்தான் மார்பு;

ஆங்கு,

கடலொடு புலம்புவோள் கலங்கு அஞர் தீர,

கெடல் அருங் காதலர் துனைதர, பிணி நீங்கி,

அறன் அறிந்து ஒழுகும் அங்கணாளனைத் . . . .

திறன் இலார் எடுத்த தீ மொழி எல்லாம்

நல் அவையுள் படக் கெட்டாங்கு,

இல்லாகின்று, அவள் ஆய் நுதல் பசப்பே.

நெய்தற் கலி

← பாடல் 1872பாடல் 1874 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்