நூல்கள்›கலித்தொகை›பாடல் 1845

பாடல் 1845

பாங்கு அரும் பாட்டங்கால் கன்றொடு செல்வேம்; எம்

தாம்பின் ஒரு தலை பற்றினை, ஈங்கு எம்மை

முன்னை நின்றாங்கே விலக்கிய எல்லா! நீ

என்னை ஏமுற்றாய் விடு;

விடேஎன்; தொடீஇய செல்வார்த் துமித்து, எதிர் மண்டும் . . . .

கடு வய நாகு போல் நோக்கி, தொழுவாயில்

நீங்கி, சினவுவாய் மற்று;

நீ நீங்கு; கன்று சேர்ந்தார்கண் கத ஈற்றாச் சென்றாங்கு,

வன்கண்ணள் ஆய் வரல் ஓம்பு;

யாய் வருக ஒன்றோ; பிறர் வருக; மற்று நின் . . . .

கோ வரினும் இங்கே வருக; தளரேன் யான்,

நீ அருளி நல்கப் பெறின்;

நின்னை யான் சொல்லினவும் பேணாய், நினைஇ'

கனை பெயல் ஏற்றின் தலை சாய்த்து, எனையதூஉம்

மாறு எதிர் கூறி, மயக்குப்படுகுவாய்! . . . .

கலத்தொடு யாம் செல்வுழி நாடி, புலத்தும்

வருவையான் நாண்இலி! நீ

முல்லைக் கலி

← பாடல் 1844பாடல் 1846 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்