நூல்கள்›கலித்தொகை›பாடல் 1846

பாடல் 1846

மாண உருக்கிய நன் பொன் மணி உறீஇ,

பேணித் துடைத்தன்ன மேனியாய்! கோங்கின்

முதிரா இள முகை ஒப்ப, எதிரிய

தொய்யில் பொறித்த வன முலையாய்! மற்று, நின்

கையது எவன்? மற்று உரை; . . . .

'கையதை சேரிக் கிழவன் மகளேன் யான்; மற்று இஃது ஓர்

மாதர்ப் புலைத்தி விலையாகச் செய்தது ஓர்

போழின் புனைந்த வரிப் புட்டில்.' 'புட்டிலுள் என் உள?

காண் தக்காய்! எற் காட்டிக் காண்;'

காண், இனி: தோட்டார் கதுப்பின் என் தோழி அவரொடு . . . .

காட்டுச் சார்க் கொய்த சிறு முல்லை, மற்று இவை

முல்லை இவை ஆயின் முற்றிய கூழையாய்!

எல்லிற்று, போழ்து ஆயின் ஈதோளிக் கண்டேனால்;

'செல்' என்று நின்னை விடுவேன், யான்; மற்று எனக்கு

மெல்லியது, ஓராது அறிவு. . . . .

முல்லைக் கலி

← பாடல் 1845பாடல் 1847 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்