நூல்கள்›கலித்தொகை›பாடல் 1839

பாடல் 1839

'கடி கொள் இருங் காப்பில் புல்லினத்து ஆயர்

குடிதொறும் நல்லாரை வேண்டுதி எல்லா!

இடு தேள் மருந்தோ, நின் வேட்கை தொடுதரத்

துன்னி, தந்தாங்கே, நகை குறித்து, எம்மைத்

திளைத்தகு எளியமாக் கண்டை; "அளைக்கு எளியாள் . . . .

வெண்ணெய்க்கும் அன்னள்" எனக் கொண்டாய்' ஒண்ணுதால்!

ஆங்கு நீ கூறின், அனைத்தாக; நீங்குக;

அச்சத்தான் மாறி, அசைவினான் போத்தந்து,

நிச்சம் தடுமாறும் மெல் இயல் ஆய்மகள்!

மத்தம் பிணித்த கயிறு போல், நின் நலம் . . . .

சுற்றிச் சுழலும் என் நெஞ்சு;

விடிந்த பொழுதினும் இல்வயின் போகாது,

கொடுந் தொழுவினுள் பட்ட கன்றிற்குச் சூழும்

கடுஞ்சூல் ஆ நாகு போல், நிற் கண்டு, நாளும்,

நடுங்கு அஞர் உற்றது என் நெஞ்சு . . . .

எவ்வம் மிகுதர, எம் திறத்து, எஞ்ஞான்றும்,

நெய் கடை பாலின் பயன் யாதும் இன்றாகி,

கை தோயன் மாத்திரை அல்லது, செய்தி

அறியாது அளித்து என் உயிர்;'

அன்னையோ, மன்றத்துக் கண்டாங்கே, 'சான்றார் மகளிரை . . . .

இன்றி அமையேன்' என்று, இன்னவும் சொல்லுவாய்;

நின்றாய்; நீ சென்றீ; எமர் காண்பர்; நாளையும்

கன்றொடு சேறும், புலத்து.

முல்லைக் கலி

← பாடல் 1838பாடல் 1840 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்