நூல்கள்›கலித்தொகை›பாடல் 1826

பாடல் 1826

அன்னை: கடுஞ் சொல் அறியாதாய் போல, நீ

என்னைப் புலப்பது ஒறுக்குவென்மன் யான்

சிறுகாலை இற் கடை வந்து, குறி செய்த

அவ் வழி என்றும் யான் காணேன் திரிதர,

'எவ் வழிப் பட்டாய்?' சமனாக இவ் எள்ளல்; . . . .

முத்து ஏர் முறுவலாய்! நம் வலைப் பட்டது ஓர்

புத்தியானை வந்தது; காண்பான் யான் தங்கினேன்;

ஒக்கும்

அவ் யானை வனப்பு உடைத்தாகலும் கேட்டேன்:

அவ் யானை தான் சுண்ண நீறு ஆடி, நறு நறா நீர் உண்டு . . . .

ஒள் நுதல் யாத்த திலக அவிர் ஓடை,

தொய்யில் பொறித்த வன முலை வான் கோட்டு,

தொய்யகத் தோட்டி, குழை தாழ் வடி மணி,

உத்தி பொறித்த புனை பூண் பருமத்து

முத்து ஏய்க்கும் வெண் பல் நகை திறந்து, . . . .

நல் நகர் வாயில் கதவ வெளில் சார்ந்து,

தன் நலம் காட்டி, தகையினால், கால் தட்டி வீழ்க்கும்,

தொடர் தொடராக வலந்து; படர் செய்யும்

மென் தோள் தடக் கையின் வாங்கி, தற் கண்டார்

நலம் கவளம் கொள்ளும்; நகை முக வேழத்தை . . . .

இன்று கண்டாய் போல் எவன் எம்மைப் பொய்ப்பது, நீ;

எல்லா! கெழீஇ, தொடி செறித்த தோள் இணை, தத்தித்

தழீஇக் கொண்டு, ஊர்ந்தாயும் நீ;

குழீஇ அவாவினால், தேம்புவார் இற் கடை ஆறா,

உவா அணி ஊர்ந்தாயும் நீ; . . . .

மிகாஅது சீர்ப்பட உண்ட சிறு களி ஏர் உண்கண்

நீர்க்கு விட்டு, ஊர்ந்தாயும் நீ;

சார்ச்சார் நெறி தாழ் இருங் கூந்தல் நின் பெண்டிர் எல்லாம்

சிறு பாகராகச் சிரற்றாது, மெல்ல,

விடாஅது நீ எம் இல் வந்தாய்; அவ் யானை . . . .

கடாஅம் படும்; இடத்து ஓம்பு;

மருதக் கலி

← பாடல் 1825பாடல் 1827 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்