நூல்கள்›கலித்தொகை›பாடல் 1820

பாடல் 1820

அரி நீர் அவிழ் நீலம், அல்லி, அனிச்சம்,

புரி நெகிழ் முல்லை, நறவோடு, அமைந்த

தெரி மலர்க் கண்ணியும் தாரும் நயந்தார்

பொரு முரண் சீறச் சிதைந்து, நெருநையின்

இன்று நன்று, என்னை அணி; . . . .

அணை மென் தோளாய்! செய்யாத சொல்லிச் சினவுவது ஈங்குஎவன்,

ஐயத்தால்? என்னைக் கதியாதி; தீது இன்மை

தெய்வத்தான் கண்டீ தெளிக்கு;

மற்றது, அறிவல், யான் நின் சூள்; அனைத்தாக நல்லார்

செறி தொடி உற்ற வடுவும், குறி பொய்த்தார் . . . .

கூர் உகிர் சாடிய மார்பும், குழைந்த நின்

தாரும், ததர் பட்ட சாந்தமும், சேரி

அரி மதர் உண் கண்ணார் ஆராக் கவவின்,

பரிசு அழிந்து யாழ நின் மேனி கண்டு, யானும்

செரு ஒழிந்தேன்; சென்றீ, இனி; . . . .

தெரியிழாய்! தேற்றாய் சிவந்தனை காண்பாய், நீ தீது இன்மை

ஆற்றின் நிறுப்பல் பணிந்து;

அன்னதேல், ஆற்றல் காண்

வேறுபட்டாங்கே கலுழ்தி; அகப்படின்,

மாறுபட்டாங்கே மயங்குதி; யாது ஒன்றும் . . . .

கூறி உணர்த்தலும் வேண்டாது; மற்று நீ

மாணா செயினும், மறுத்து, ஆங்கே நின்வயின்

காணின் நெகிழும் என் நெஞ்சு ஆயின், என் உற்றாய்,

பேணாய் நீ பெட்பச் செயல்.

மருதக் கலி

← பாடல் 1819பாடல் 1821 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்