நூல்கள்›கலித்தொகை›பாடல் 1818

பாடல் 1818

யார் இவன்? எம் கூந்தல் கொள்வான்? இதுவும் ஓர்

ஊராண்மைக்கு ஒத்த படிறு உடைத்து; எம் மனை

வாரல்; நீ வந்தாங்கே மாறு;

என் இவை, ஓர் உயிர்ப் புள்ளின் இரு தலையுள் ஒன்று

போர் எதிர்ந்தற்றாப் புலவல்? நீ கூறின், என் . . . .

ஆர் உயிர் நிற்கும் ஆறு யாது;

ஏஎ! தெளிந்தேம் யாம்; காயாதி எல்லாம் வல் எல்லா!

பெருங் காட்டுக் கொற்றிக்குப் பேய் நொடித்தாங்கு,

வருந்தல் நின் வஞ்சம் உரைத்து;

மருந்து இன்று மன்னவன் சீறின், தவறு உண்டோ ? நீ நயந்த, . . . .

இன்னகை! தீதோ இலேன்;

மாண மறந்து உள்ளா நாணிலிக்கு இப் போர்

புறம் சாய்ந்து காண்டைப்பாய் நெஞ்சே! உறழ்ந்து இவனைப்

பொய்ப்ப விடேஎம் என நெருங்கின், தப்பினேன்

என்று அடி சேர்தலும் உண்டு! . . . .

மருதக் கலி

← பாடல் 1817பாடல் 1819 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்