நூல்கள்›கலித்தொகை›பாடல் 1817

பாடல் 1817

ஒரூஉ; கொடி இயல் நல்லார் குரல் நாற்றத்து உற்ற

முடி உதிர் பூந் தாது மொய்ம்பின ஆக,

தொடிய, எமக்கு நீ யாரை? பெரியார்க்கு

அடியரோ ஆற்றாதவர்;

கடியர் தமக்கு யார் சொல்லத் தக்கார் மாற்று; . . . .

வினைக்கெட்டு, வாய் அல்லா வெண்மை உரையாது கூறு நின்

மாயம், மருள்வாரகத்து;

ஆயிழாய்! நின் கண் பெறின் அல்லால், இன் உயிர் வாழ்கல்லா

என்கண் எவனோ, தவறு;

இஃது ஒத்தன்! புள்ளிக் களவன் புனல் சேர் பொதுக்கம் போல், . . . .

வள் உகிர் போழ்ந்தனவும், வாள் எயிறு உற்றனவும்,

ஒள் இதழ் சோர்ந்த நின் கண்ணியும், நல்லார்

சிரறுபு சீறச் சிவந்த நின் மார்பும்,

தவறாதல் சாலாவோ? கூறு;

'அது தக்கது; வேற்றுமை என்கண்ணோ ஓராதி; தீது இன்மை . . . .

தேற்றக் கண்டீயாய்; தெளிக்கு;

இனித் தேற்றேம் யாம்,

தேர் மயங்கி வந்த தெரி கோதை அம் நல்லார்

தார் மயங்கி வந்த தவறு அஞ்சி, போர் மயங்கி,

நீ உறும் பொய்ச் சூள் அணங்கு ஆகின், மற்று இனி . . . .

யார் மேல்? விளியுமோ? கூறு.

மருதக் கலி

← பாடல் 1816பாடல் 1818 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்