நூல்கள்›கலித்தொகை›பாடல் 1816

பாடல் 1816

ஒரூஉ நீ; எம் கூந்தல் கொள்ளல் யாம் நின்னை

வெரூஉதும், காணுங்கடை;

தெரியிழாய்! செய் தவறு இல்வழி, யாங்குச் சினவுவாய்,

மெய் பிரிந்து, அன்னவர்மாட்டு,

ஏடா! நினக்குத் தவறு உண்டோ ? நீ வீடு பெற்றாய்; . . . .

இமைப்பின் இதழ் மறைபு ஆங்கே கெடுதி;

நிலைப் பால் அறியினும், நின் நொந்து நின்னைப்

புலப்பார் உடையர், தவறு;

அணைத் தோளாய்! தீயாரைப் போல, திறன் இன்று உடற்றுதி;

காயும் தவறு இலேன் யான்; . . . .

மான் நோக்கி! நீ அழ நீத்தவன் ஆனாது

நாணிலன்ஆயின், நலிதந்து அவன்வயின்

ஊடுதல் என்னோ, இனி;

'இனி யாதும் மீக்கூற்றம் யாம் இலம்' என்னும்

தகையது காண்டைப்பாய், நெஞ்சே! பனி ஆனாப் . . . .

பாடு இல் கண் பாயல் கொள.

மருதக் கலி

← பாடல் 1815பாடல் 1817 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்