நூல்கள்›கலித்தொகை›பாடல் 1734

பாடல் 1734

பாஅல் அம் செவிப் பணைத் தாள் மா நிரை

மாஅல் யானையொடு மறவர் மயங்கித்

தூறு அதர்பட்ட ஆறு மயங்கு அருஞ் சுரம்

இறந்து, நீர் செய்யும் பொருளினும், யாம் உமக்குச்

சிறந்தனம் ஆதல் அறிந்தனிர்ஆயின், . . . .

நீள் இரு முந்நீர் வளி கலன் வௌவலின்

ஆள்வினைக்கு அழிந்தோர் போறல் அல்லதைக்,

கேள் பெருந் தகையோடு எவன் பல மொழிகுவம்?

நாளும் கோள் மீன் தகைத்தலும் தகைமே,

கல்லெனக் கவின் பெற்ற விழவு ஆற்றுப்படுத்த பின், . . . .

புல்லென்ற களம் போலப் புலம்பு கொண்டு, அமைவாளோ?

ஆள்பவர் கலக்குற அலைபெற்ற நாடு போல்,

பாழ்பட்ட முகத்தோடு, பைதல் கொண்டு, அமைவாளோ?

ஓர் இரா வைகலுள், தாமரைப் பொய்கையுள்

நீர் நீத்த மலர் போல, நீ நீப்பின், வாழ்வாளோ? . . . .

எனவாங்கு,

பொய்ந் நல்கல் புரிந்தனை புறந்தரல் கைவிட்டு,

எந் நாளோ, நெடுந் தகாய்! நீ செல்வது,

அந் நாள் கொண்டு இறக்கும், இவள் அரும் பெறல் உயிரே.

பாலைக் கலி

← பாடல் 1733பாடல் 1735 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்