நூல்கள்›நற்றிணை›பாடல் 1730

பாடல் 1730

ஆலங்குடி வங்கனார்

வாழை மென் தோடு வார்புஉறுபு ஊக்கும்

நெல் விளை கழனி நேர் கண் செறுவின்,

அரிவனர் இட்ட சூட்டு அயல், பெரிய

இருஞ் சுவல் வாளை பிறழும் ஊர!

நினின்று அமைகுவென்ஆயின், இவண் நின்று . . . .

இன்னா நோக்கமொடு எவன் பிழைப்பு உண்டோ?

மறம் கெழு சோழர் உறந்தை அவையத்து,

அறம் கெட அறியாதாங்கு, சிறந்த

கேண்மையொடு அளைஇ, நீயே

கெடு அறியாய் என் நெஞ்சத்தானே . . . .

மருதம்

← பாடல் 1729பாடல் 1731 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்