நூல்கள்›நற்றிணை›பாடல் 1729

பாடல் 1729

ஆசிரியர் அறியப்படவில்லை

அருவி ஆர்க்கும் பெரு வரை அடுக்கத்து,

குருதி ஒப்பின் கமழ் பூங் காந்தள்

வரி அணி சிறகின் வண்டு உண மலரும்

வாழை அம் சிலம்பில், கேழல் கெண்டிய

நிலவரை நிவந்த பல உறு திரு மணி . . . .

ஒளி திகழ் விளக்கத்து, ஈன்ற மடப் பிடி,

களிறு புறங்காப்ப, கன்றொடு வதியும்

மா மலை நாடன் நயந்தனன் வரூஉம்

பெருமை உடையள் என்பது

தருமோ - தோழி! - நின் திரு நுதல் கவினே? . . . .

குறிஞ்சி

← பாடல் 1728பாடல் 1730 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்