நூல்கள்›நற்றிணை›பாடல் 1728

பாடல் 1728

உலோச்சனார்

உரு கெழு தெய்வமும் கரந்து உறையின்றே;

விரி கதிர் ஞாயிறும் குடக்கு வாங்கும்மே;

நீர் அலைக் கலைஇய கூழை வடியாச்

சாஅய் அவ் வயிறு அலைப்ப, உடன் இயைந்து,

ஓரை மகளிரும், ஊர் எய்தினரே . . . .

பல் மலர் நறும் பொழில் பழிச்சி, யாம் 'முன்,

சென்மோ, 'சேயிழை?' என்றனம்; அதன் எதிர்

சொல்லாள் மெல்லியல், சிலவே - நல் அகத்து

யாணர் இள முலை நனைய,

மாண் எழில் மலர்க் கண் தெண் பனி கொளவே . . . .

நெய்தல்

← பாடல் 1727பாடல் 1729 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்