நூல்கள்›நற்றிணை›பாடல் 1726

பாடல் 1726

ஆசிரியர் அறியப்படவில்லை

பெய்து போகு எழிலி வைகு மலை சேர,

தேன் தூங்கு உயர் வரை அருவி ஆர்ப்ப,

வேங்கை தந்த வெற்பு அணி நல் நாள்,

பொன்னின் அன்ன பூஞ் சினை துழைஇ,

கமழ் தாது ஆடிய கவின் பெறு தோகை . . . .

பாசறை மீமிசைக் கணம் கொள்பு, ஞாயிற்று

உறு கதிர் இள வெயில் உண்ணும் நாடன்!

நின் மார்பு அணங்கிய செல்லல் அரு நோய்

யார்க்கு நொந்து உரைக்கோ யானே - பல் நாள்

காமர் நனி சொல் சொல்லி . . . .

ஏமம் என்று அருளாய், நீ மயங்கினையே?

குறிஞ்சி

← பாடல் 1725பாடல் 1727 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்