நூல்கள்›நற்றிணை›பாடல் 1725

பாடல் 1725

அம்மூவனார்

யாரை, எலுவ? யாரே, நீ எமக்கு

யாரையும் அல்லை; நொதுமலாளனை;

அனைத்தால் கொண்க, நம்மிடையே நினைப்பின்;

கடும் பகட்டு யானை நெடுந் தேர்க் குட்டுவன்

வேந்து அடு மயக்கத்து முரசு அதிர்ந்தன்ன . . . .

ஓங்கற் புணரி பாய்ந்து ஆடு மகளிர்

அணிந்திடு பல் பூ மரீஇ, ஆர்ந்த

ஆ புலம் புகுதரு பேர் இசை மாலைக்

கடல் கெழு மாந்தை அன்ன, எம்

வேட்டனை அல்லையால், நலம் தந்து சென்மே . . . .

நெய்தல்

← பாடல் 1724பாடல் 1726 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்