நூல்கள்›நற்றிணை›பாடல் 1721

பாடல் 1721

பாலை பாடிய பெருங்கடுங்கோ

ஆழல், மடந்தை! அழுங்குவர் செலவே

புலிப் பொறி அன்ன புள்ளி அம் பொதும்பின்

பனிப் பவர் மேய்ந்த மா இரு மருப்பின்

மலர் தலைக் காரான் அகற்றிய தண் நடை

ஒண் தொடி மகளிர் இழை அணிக் கூட்டும் . . . .

பொன் படு, கொண்கான நன்னன் நல் நாட்டு

ஏழிற்குன்றம் பெறினும், பொருள்வயின்

யாரோ பிரிகிற்பவரே - குவளை

நீர் வார் நிகர் மலர் அன்ன, நின்

பேர் அமர் மழைக் கண் தெண் பனி கொளவே? . . . .

பாலை

← பாடல் 1720பாடல் 1722 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்