பாடல் 1719
காவிரிப் பூம்பட்டினத்துச் செங்கண்ணனார்
வேங்கையும் புலி ஈன்றன; அருவியும்
தேம் படு நெடு வரை மணியின் மானும்;
அன்னையும் அமர்ந்து நோக்கினளே, என்னையும்
களிற்று முகம் திறந்த கல்லா விழுத் தொடை
ஏவல் இளையரொடு மா வழிப்பட்டென . . . .
'சிறு கிளி முரணிய பெருங் குரல் ஏனல்
காவல் நீ' என்றோளே; சேவலொடு
சிலம்பின் போகிய சிதர் கால் வாரணம்
முதைச் சுவல் கிளைத்த பூழி, மிகப் பல
நன் பொன் இமைக்கும் நாடனொடு . . . .
அன்புறு காமம் அமைக நம் தொடர்பே.
குறிஞ்சி