நூல்கள்›நற்றிணை›பாடல் 1718

பாடல் 1718

மதுரை மருதங்கிழார் மகனார் பெருங்கண்ணனார்

அம்ம வாழி, தோழி! - நன்னுதற்கு

யாங்கு ஆகின்றுகொல் பசப்பே - நோன் புரிக்

கயிறு கடை யாத்த கடு நடை எறி உளித்

திண் திமில் பரதவர் ஒண் சுடர்க் கொளீஇ,

நடு நாள் வேட்டம் போகி, வைகறைக் . . . .

கடல் மீன் தந்து, கானற் குவைஇ,

ஓங்கு இரும் புன்னை வரி நிழல் இருந்து,

தேம் கமழ் தேறல் கிளையொடு மாந்தி,

பெரிய மகிழும் துறைவன் எம்

சிறிய நெஞ்சத்து அகல்வு அறியானே? . . . .

நெய்தல்

← பாடல் 1717பாடல் 1719 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்