பாடல் 1716
ஆசிரியர் அறியப்படவில்லை
சிறு கட் பன்றிப் பெருஞ் சின ஒருத்தல்,
துறுகட் கண்ணிக் கானவர் உழுத
குலவுக் குரல் ஏனல் மாந்தி, ஞாங்கர்,
விடர் அளைப் பள்ளி வேங்கை அஞ்சாது,
கழை வளர் சாரல் துஞ்சும் நாடன் . . . .
'அணங்குடை அருஞ் சூள் தருகுவென்' என நீ,
'நும்மோர் அன்னோர் துன்னார் இவை' என,
தெரிந்து அது வியந்தனென் - தோழி! - பணிந்து நம்
கல் கெழு சிறுகுடிப் பொலிய,
வதுவை என்று அவர் வந்த ஞான்றே . . . .
குறிஞ்சி