நூல்கள்›நற்றிணை›பாடல் 1714

பாடல் 1714

பாலை பாடிய பெருங்கடுங்கோ

பைம் புறப் புறவின் செங் காற் சேவல்

களரி ஓங்கிய கவை முடக் கள்ளி

முளரி அம் குடம்பை ஈன்று, இளைப்பட்ட

உயவு நடைப் பேடை உணீஇய, மன்னர்

முனை கவர் முது பாழ் உகு நெற் பெறூஉம் . . . .

அரண் இல் சேய் நாட்டு அதர் இடை, மலர்ந்த

நல் நாள் வேங்கைப் பொன் மருள் புதுப் பூப்

பரந்தன நடக்க, யாம் கண்டனம் மாதோ:

காண் இனி வாழி - என் நெஞ்சே! - நாண் விட்டு

அருந் துயர் உழந்த காலை . . . .

மருந்து எனப்படூஉம் மடவோளையே.

பாலை

← பாடல் 1713பாடல் 1715 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்