நூல்கள்›நற்றிணை›பாடல் 1712

பாடல் 1712

நிகண்டன் கலைக்கோட்டுத் தண்டனார

கானல் மாலைக் கழி நீர் மல்க,

நீல் நிற நெய்தல் நிரை இதழ் பொருந்த,

ஆனாது அலைக்கும் கடலே; மீன் அருந்தி,

புள்ளினம் குடம்பை உடன் சேர்பு உள்ளார்

துறந்தோர் தேஎத்து இருந்து, நனி வருந்தி . . . .

ஆர் உயிர் அழிவதுஆயினும் - நேரிழை!

கரத்தல் வேண்டுமால் மற்றே, பரப்பு நீர்த்

தண்ணம் துறைவன் நாண,

நண்ணார் தூற்றும் பழிதான் உண்டே.

நெய்தல்

← பாடல் 1711பாடல் 1713 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்