பாடல் 1711
அவ்வையார்
'அருந் துயர் உழத்தலின் உண்மை சான்ம்' எனப்
பெரும்பிறிது இன்மையின் இலேனும் அல்லேன்;
கரை பொருது இழிதரும் கான் யாற்று இகுகரை
வேர் கிளர் மராஅத்து அம் தளிர் போல,
நடுங்கல் ஆனா நெஞ்சமொடு, இடும்பை . . . .
யாங்கனம் தாங்குவென் மற்றே? - ஓங்கு செலல்
கடும் பகட்டு யானை நெடு மான் அஞ்சி,
ஈர நெஞ்சமோடு இசை சேண் விளங்க,
தேர் வீசு இருக்கை போல,
மாரி இரீஇ மான்றன்றால் மழையே . . . .
முல்லை