பாடல் 1710
கூடலூர்ப் பல்கண்ணனார்
நெய்யும் குய்யும் ஆடி, மெய்யொடு
மாசு பட்டன்றே கலிங்கமும்; தோளும்,
திதலை மென் முலைத் தீம் பால் பிலிற்ற,
புதல்வற் புல்லிப் புனிறு நாறும்மே;
வால் இழை மகளிர் சேரித் தோன்றும் . . . .
தேரோற்கு ஒத்தனெம் அல்லேம்; அதனால்
பொன் புரை நரம்பின் இன் குரல் சீறியாழ்
எழாஅல் வல்லை ஆயினும், தொழாஅல்;
கொண்டு செல் - பாண! - நின் தண் துறை ஊரனை,
பாடு மனைப் பாடல்; கூடாது நீடு நிலைப் . . . .
புரவியும் பூண் நிலை முனிகுவ;
விரகு இல மொழியல், யாம் வேட்டது இல் வழியே!
மருதம்