பாடல் 1708
வடம வண்ணக்கன் பேரி சாத்தனார்
யாமமும் நெடிய கழியும்; காமமும்
கண்படல் ஈயாது பெருகும்; தெண் கடல்
முழங்கு திரை, முழவின் பாணியின், பைபய,
பழம் புண் உறுநரின், பரவையின் ஆலும்;
ஆங்கு அவை நலியவும், நீங்கி யாங்கும் . . . .
இரவு இறந்து, எல்லை தோன்றலது; அலர் வாய்
அயல் இற் பெண்டிர் பசலை பாட,
ஈங்கு ஆகின்றால் - தோழி! - ஓங்கு மணல்
வரி ஆர் சிறு மனை சிதைஇ வந்து,
பரிவுதரத் தொட்ட பணிமொழி நம்பி . . . .
பாடு இமிழ் பனி நீர்ச் சேர்ப்பனொடு
நாடாது இயைந்த நண்பினது அளவே
நெய்தல்