நூல்கள்›நற்றிணை›பாடல் 1707

பாடல் 1707

மடல் பாடிய மாதங்கீரனார்

மடல் மா ஊர்ந்து, மாலை சூடி,

கண் அகன் வைப்பின் நாடும் ஊரும்

ஒள் நுதல் அரிவை நலம் பாராட்டி,

பண்ணல் மேவலமாகி, அரிது உற்று,

அது பிணி ஆக, விளியலம்கொல்லோ . . . .

அகல் இரு விசும்பின் அரவுக் குறைபடுத்த

பசுங் கதிர் மதியத்து அகல் நிலாப் போல,

அளகம் சேர்ந்த திருநுதல்

கழறுபு மெலிக்கும் நோய் ஆகின்றே?

குறிஞ்சி

← பாடல் 1706பாடல் 1708 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்