நூல்கள்›நற்றிணை›பாடல் 1706

பாடல் 1706

கபிலர்

முறஞ்செவி யானைத் தடக் கையின் தடைஇ

இறைஞ்சிய குரல பைந் தாட் செந் தினை,

வரையோன் வண்மை போல, பல உடன்

கிளையோடு உண்ணும் வளைவாய்ப் பாசினம்!

குல்லை, குளவி, கூதளம், குவளை . . . .

இல்லமொடு மிடைந்த ஈர்ந் தண் கண்ணியன்,

சுற்று அமை வில்லன், செயலைத் தோன்றும்

நல் தார் மார்பன், காண்குறின், சிறிய

நன்கு அவற்கு அறிய உரைமின்; பிற்றை

அணங்கும் அணங்கும் போலும்? அணங்கி . . . .

வறும் புனம் காவல் விடாமை

அறிந்தனிர்அல்லிரோ, அறன் இல் யாயே?

குறிஞ்சி

← பாடல் 1705பாடல் 1707 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்