நூல்கள்›நற்றிணை›பாடல் 1705

பாடல் 1705

பொதும்பில் கிழார் மகன் வெண்கண்ணி

நீடு சினைப் புன்னை நறுந் தாது உதிர,

கோடு புனை குருகின் தோடு தலைப் பெயரும்

பல் பூங் கானல் மல்கு நீர்ச் சேர்ப்ப!

அன்பு இலை; ஆதலின், தன் புலன் நயந்த

என்னும் நாணும் நன்னுதல் உவப்ப . . . .

வருவைஆயினோ நன்றே - பெருங் கடல்

இரவுத் தலை மண்டிலம் பெயர்ந்தென, உரவுத் திரை

எறிவன போல வரூஉம்

உயர் மணல் படப்பை எம் உறைவின் ஊரே.

நெய்தல்

← பாடல் 1704பாடல் 1706 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்