நூல்கள்›நற்றிணை›பாடல் 1704

பாடல் 1704

வன் பரணர்

முரம்பு தலை மணந்த நிரம்பா இயவின்

ஓங்கித் தோன்றும் உமண் பொலி சிறுகுடிக்

களரிப் புளியின் காய் பசி பெயர்ப்ப,

உச்சிக் கொண்ட ஓங்கு குடை வம்பலீர்!

முற்றையும் உடையமோ மற்றே - பிற்றை . . . .

வீழ் மா மணிய புனை நெடுங் கூந்தல்,

நீர் வார் புள்ளி ஆகம் நனைப்ப,

விருந்து அயர் விருப்பினள் வருந்தும்

திருந்துஇழை, அரிவைத் தேமொழி நிலையே?

முல்லை

← பாடல் 1703பாடல் 1705 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்