நூல்கள்›நற்றிணை›பாடல் 1701

பாடல் 1701

அவ்வையார்

காயாங் குன்றத்துக் கொன்றை போல,

மா மலை விடர் அகம் விளங்க மின்னி,

மாயோள் இருந்த தேஎம் நோக்கி,

வியல் இரு விசும்பு அகம் புதையப் பாஅய்,

பெயல் தொடங்கினவே, பெய்யா வானம் . . . .

நிழல் திகழ் சுடர்த் தொடி ஞெகிழ ஏங்கி,

அழல் தொடங்கினளே ஆயிழை; அதன் எதிர்,

குழல் தொடங்கினரே கோவலர்

தழங்கு குரல் உருமின் கங்குலானே.

முல்லை

← பாடல் 1700பாடல் 1702 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்