பாடல் 1700
உறையூர்க் கதுவாய்ச் சாத்தனார்
வாராய், பாண! நகுகம் - நேரிழை
கடும்புடைக் கடுஞ் சூல் நம் குடிக்கு உதவி,
நெய்யோடு இமைக்கும் ஐயவித் திரள் காழ்
விளங்கு நகர் விளங்கக் கிடந்தோட் குறுகி,
'புதல்வன் ஈன்றெனப் பெயர் பெயர்த்து, அவ் வரித் . . . .
திதலை அல்குல் முது பெண்டு ஆகி,
துஞ்சுதியோ, மெல் அம் சில் ஓதி?' என,
பல் மாண் அகட்டில் குவளை ஒற்றி,
உள்ளினென் உறையும் எற் கண்டு, மெல்ல,
முகை நாண் முறுவல் தோற்றி . . . .
தகை மலர் உண்கண் கை புதைத்ததுவே.
மருதம்