நூல்கள்›நற்றிணை›பாடல் 1692

பாடல் 1692

மதுரை மருதன் இளநாகனார்

வினை அமை பாவையின் இயலி, நுந்தை

மனை வரை இறந்து வந்தனை; ஆயின்,

தலை நாட்கு எதிரிய தண் பத எழிலி

அணி மிகு கானத்து அகன் புறம் பரந்த

கடுஞ் செம்மூதாய் கண்டும், கொண்டும் . . . .

நீ விளையாடுக சிறிதே; யானே,

மழ களிறு உரிஞ்சிய பராரை வேங்கை

மணல் இடு மருங்கின் இரும் புறம் பொருந்தி,

அமர் வரின், அஞ்சேன், பெயர்க்குவென்;

நுமர் வரின், மறைகுவென் - மாஅயோளே! . . . .

பாலை

← பாடல் 1691பாடல் 1693 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்