நூல்கள்›நற்றிணை›பாடல் 1690

பாடல் 1690

ஓரம்போகியார்

முழவு முகம் புலர்ந்து முறையின் ஆடிய

விழவு ஒழி களத்த பாவை போல,

நெருநைப் புணர்ந்தோர் புது நலம் வெளவி,

இன்று தரு மகளிர் மென் தோள் பெறீஇயர்,

சென்றீ - பெரும! - சிறக்க, நின் பரத்தை! . . . .

பல்லோர் பழித்தல் நாணி, வல்லே

காழின் குத்திக் கசிந்தவர் அலைப்ப,

கைஇடை வைத்தது மெய்யிடைத் திமிரும்

முனியுடைக் கவளம் போல, நனி பெரிது

உற்ற நின் விழுமம் உவப்பென் . . . .

மற்றும் கூடும், மனை மடி துயிலே.

மருதம்

← பாடல் 1689பாடல் 1691 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்