நூல்கள்›நற்றிணை›பாடல் 1689

பாடல் 1689

கபிலர்

சிலம்பின் மேய்ந்த சிறு கோட்டுச் சேதா

அலங்கு குலைக் காந்தள் தீண்டி, தாது உக,

கன்று தாய் மருளும் குன்ற நாடன்

உடுக்கும் தழை தந்தனனே; யாம் அஃது

உடுப்பின், யாய் அஞ்சுதுமே; கொடுப்பின் . . . .

கேளுடைக் கேடு அஞ்சுதுமே; ஆயிடை

வாடலகொல்லோ தாமே - அவன் மலைப்

போருடை வருடையும் பாயா,

சூருடை அடுக்கத்த கொயற்கு அருந் தழையே?

குறிஞ்சி

← பாடல் 1688பாடல் 1690 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்