நூல்கள்›நற்றிணை›பாடல் 1685

பாடல் 1685

ஆசிரியர் அறியப்படவில்லை

புதல்வன் ஈன்ற பூங் கண் மடந்தை

முலை வாய் உறுக்கும் கை போல், காந்தட்

குலைவாய் தோயும் கொழு மடல் வாழை

அம் மடல் பட்ட அருவித் தீம் நீர்

செம் முக மந்தி ஆரும் நாட! . . . .

முந்தை இருந்து நட்டோர் கொடுப்பின்,

நஞ்சும் உண்பர் நனி நாகரிகர்;

அம் சில் ஓதி என் தோழி தோட் துயில்

நெஞ்சின் இன்புறாய்ஆயினும், அது நீ

என் கண் ஓடி அளிமதி . . . .

நின் கண் அல்லது பிறிது யாதும் இலளே!

குறிஞ்சி

← பாடல் 1684பாடல் 1686 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்