நூல்கள்›நற்றிணை›பாடல் 1684

பாடல் 1684

உலோச்சனார்

தான் அது பொறுத்தல் யாவது - கானல்

ஆடு அரை ஒழித்த நீடு இரும் பெண்ணை

வீழ் காவோலைச் சூழ் சிறை யாத்த

கானல் நண்ணிய வார் மணல் முன்றில்,

எல்லி அன்ன இருள் நிறப் புன்னை . . . .

நல் அரை முழுமுதல் அவ் வயின் தொடுத்த

தூங்கல் அம்பித் தூவல் அம் சேர்ப்பின்,

கடு வெயில் கொதித்த கல் விளை உப்பு

நெடு நெறி ஒழுகை நிரை செலப் பார்ப்போர்

அளம் போகு ஆகுலம் கடுப்ப . . . .

கௌவை ஆகின்றது, ஐய! நின் நட்பே?

நெய்தல்

← பாடல் 1683பாடல் 1685 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்