நூல்கள்›நற்றிணை›பாடல் 1683

பாடல் 1683

கபிலர்

ஆள் இல் பெண்டிர் தாளின் செய்த

நுணங்கு நுண் பனுவல் போல, கணம் கொள,

ஆடு மழை தவழும் கோடு உயர் நெடு வரை,

முட முதிர் பலவின் குடம் மருள் பெரும் பழம்

கல் கெழு குறவர் காதல் மடமகள் . . . .

கரு விரல் மந்திக்கு வரு விருந்து அயரும்,

வான் தோய் வெற்ப! சான்றோய்அல்லை - எம்

காமம் கனிவதுஆயினும், யாமத்து

இரும் புலி தொலைத்த பெருங் கை யானை

வெஞ் சின உருமின் உரறும் . . . .

அஞ்சுவரு சிறு நெறி வருதலானே.

குறிஞ்சி

← பாடல் 1682பாடல் 1684 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்