நூல்கள்›நற்றிணை›பாடல் 1681

பாடல் 1681

மதுரைக் கண்ணத்தனார்

'இளமை தீர்ந்தனள் இவள்' என வள மனை

அருங்கடிப் படுத்தனை; ஆயினும், சிறந்து இவள்

பசந்தனள் என்பது உணராய்; பல் நாள்

எவ்வ நெஞ்சமொடு தெய்வம் பேணி

வருந்தல் வாழி - வேண்டு, அன்னை! - கருந் தாள் . . . .

வேங்கைஅம் கவட்டிடைச் சாந்தின் செய்த

களிற்றுத் துப்பு அஞ்சாப் புலி அதள் இதணத்து,

சிறு தினை வியன் புனம் காப்பின்,

பெறுகுவள்மன்னோ என் தோழி தன் நலனே.

குறிஞ்சி

← பாடல் 1680பாடல் 1682 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்