நூல்கள்›நற்றிணை›பாடல் 1680

பாடல் 1680

பரணர்

வெண்ணெல் அரிநர் தண்ணுமை வெரீஇ,

பழனப் பல் புள் இரிய, கழனி

வாங்கு சினை மருதத் தூங்குதுணர் உதிரும்

தேர் வண் விராஅன் இருப்பை அன்ன, என்

தொல் கவின் தொலையினும் தொலைக! சார . . . .

விடேஎன்: விடுக்குவென்ஆயின், கடைஇக்

கவவுக் கை தாங்கும் மதுகைய குவவு முலை

சாடிய சாந்தினை; வாடிய கோதையை;

ஆசு இல் கலம் தழீஇயற்று;

வாரல்; வாழிய, கவைஇ நின்றோளே! . . . .

மருதம்

← பாடல் 1679பாடல் 1681 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்