பாடல் 1674
மதுரை அறுவை வாணி கன் இளவேட்டனார்
அணி வரை மருங்கின் ஐது வளர்ந்திட்ட
மணி ஏர் தோட்ட மை ஆர் ஏனல்
இரும் பிடித் தடக் கையின் தடைஇய பெரும் புனம்
காவல் கண்ணினம்ஆயின் - ஆயிழை!
நம் நிலை இடை தெரிந்து உணரான், தன் மலை . . . .
ஆரம் நீவிய அணி கிளர் ஆகம்
சாரல் நீள் இடைச் சால வண்டு ஆர்ப்ப,
செல்வன் செல்லும்கொல் தானே - உயர் வரைப்
பெருங் கல் விடரகம் சிலம்ப, இரும் புலி
களிறு தொலைத்து உரறும் கடி இடி மழை செத்து . . . .
செந் தினை உணங்கல் தொகுக்கும்,
இன் கல் யாணர்த் தம் உறைவின் ஊர்க்கே?
குறிஞ்சி