நூல்கள்›நற்றிணை›பாடல் 1670

பாடல் 1670

நக்கீரர்

புல்லேன், மகிழ்ந! புலத்தலும் இல்லேன்

கல்லா யானைக் கடுந் தேர்ச் செழியன்

படை மாண் பெருங் குள மடை நீர் விட்டென,

கால் அணைந்து எதிரிய கணைக் கோட்டு வாளை

அள்ளல்அம் கழனி உள்வாய் ஓடி . . . .

பகடு சேறு உதைத்த புள்ளி வெண் புறத்து,

செஞ் சால் உழவர் கோல் புடை மதரி,

பைங் காற் செறுவின் அணைமுதல் பிறழும்

வாணன் சிறுகுடி அன்ன, என்

கோள் நேர் எல் வளை நெகிழ்த்த நும்மே! . . . .

மருதம்

← பாடல் 1669பாடல் 1671 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்