நூல்கள்›நற்றிணை›பாடல் 1668

பாடல் 1668

மதுரை ஆருலவிய நாட்டு ஆலம்பேரி சாத்தனார்

கடுங் கதிர் ஞாயிறு மலை மறைந்தன்றே;

அடும்பு கொடி துமிய ஆழி போழ்ந்து, அவர்

நெடுந் தேர் இன் ஒலி இரவும் தோன்றா;

இறப்ப எவ்வம் நலியும், நின் நிலை;

'நிறுத்தல் வேண்டும்' என்றி; நிலைப்ப . . . .

யாங்ஙனம் விடுமோ மற்றே! - மால் கொள

வியல் இரும் பரப்பின் இரை எழுந்து அருந்துபு,

புலவு நாறு சிறுகுடி மன்றத்து ஓங்கிய

ஆடு அரைப் பெண்ணைத் தோடு மடல் ஏறி,

கொடு வாய்ப் பேடைக் குடம்பைச் சேரிய . . . .

உயிர் செலக் கடைஇப் புணர் துணைப்

பயிர்தல் ஆனா, பைதல்அம் குருகே?

நெய்தல்

← பாடல் 1667பாடல் 1669 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்