நூல்கள்›நற்றிணை›பாடல் 1667

பாடல் 1667

பாலை பாடிய பெருங்கடுங்கோ

உலகம் படைத்த காலை - தலைவ!

மறந்தனர்கொல்லோ சிறந்திசினோரே

முதிரா வேனில் எதிரிய அதிரல்,

பராரைப் பாதிரிக் குறு மயிர் மா மலர்,

நறு மோரோடமொடு, உடன் எறிந்து அடைச்சிய . . . .

செப்பு இடந்தன்ன நாற்றம் தொக்கு உடன்,

அணி நிறம் கொண்ட மணி மருள் ஐம் பால்

தாழ் நறுங் கதுப்பில் பையென முள்கும்

அரும் பெறல் பெரும் பயம் கொள்ளாது,

பிரிந்து உறை மரபின பொருள் படைத்தோரே . . . .

பாலை

← பாடல் 1666பாடல் 1668 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்