பாடல் 1657
அம்மூவனார்
நாடல் சான்றோர் நம்புதல் பழி எனின்,
பாடு இல கலுழும் கண்ணொடு சாஅய்ச்
சாதலும் இனிதே - காதல்அம் தோழி!
அந் நிலை அல்லஆயினும், 'சான்றோர்
கடன் நிலை குன்றலும் இலர்' என்று, உடன் அமர்ந்து . . . .
உலகம் கூறுவது உண்டு என, நிலைஇய
தாயம் ஆகலும் உரித்தே - போது அவிழ்
புன்னை ஓங்கிய கானற்
தண்ணம் துறைவன் சாயல் மார்பே.
நெய்தல்